தயாரிப்பாளர்களாக மாறும் இளையதலைமுறை நடிகர்கள்
- IndiaGlitz, [Tuesday,January 26 2016]
கோலிவுட் திரையுலகில் பெரிய நடிகர்கள் முதல் அடுத்த நிலையில் இருக்கும் நடிகர்கள் வரை சொந்தப்படம் தயாரிக்க ஆரம்பித்துவிட்டனர். ஒரு படத்தின் மிகப்பெரிய செலவு அந்த படத்தின் ஹீரோ சம்பளம் தான். நடிகர்களே சொந்தப்படம் எடுக்கும்போது அந்த செலவு மிச்சமாவதால் படத்தின் பட்ஜெட் வெகுவாக குறைந்துவிடுகிறது.
இதை எண்ணியே சூர்யா, தனுஷ், விஷால், ஆர்யா, சந்தானம், அதர்வா ஆகிய இளையதலைமுறை நடிகர்கள் தற்போது சொந்த படம் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பட்டியலில் தற்போது விஷ்ணு விஷாலும் இணைந்துள்ளார். விஷ்ணுவிஷால் தற்போது நடித்து வரும் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' என்ற படத்தை அவருடைய விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனமும், இயக்குனர் எழில் அவர்களின் எழில்மாறன் புரடொக்ஷன்ஸ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றது.
'வேலைன்னு வந்துட்டா வெளைக்காரன்' படத்தில் விஷ்ணுவுடன் நிக்கி கல்ராணி, ரேஷ்மா, சூரி, ஆடுகளம் நரேன், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். எழில் இயக்கி வரும் இந்த படத்திற்கு சி.சத்யா இசையமைத்து வருகிறார். ஷக்தி ஒளிப்பதிவும், ஆனந்த் படத்தொகுப்பும் செய்யும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.