விஷ்ணுவிஷாலின் அடுத்த ஸ்போர்ட்ஸ் திரைப்படம்: மாஸ் ஃபர்ஸ்ட்லுக்

  • IndiaGlitz, [Wednesday,November 02 2022]

விஷ்ணு விஷால் நடித்த ஸ்போர்ட்ஸ் படங்களான 'வெண்ணிலா கபடி குழு’ மற்றும் ’ஜீவா’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் நடித்து வரும் மற்றொரு ஸ்போர்ட்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் வைரலாகி வருகிறது

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது ’மோகன்தாஸ்’ ’கட்டா குஸ்தி’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் ’கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஷ்ணுவிஷால் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை செல்லா அய்யாவு என்பவர் இயக்கியுள்ளார், இவர் ஏற்கனவே விஷ்ணுவிஷால் நடித்த வெற்றிப்படமான ‘சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி ‘பொன்னியின் செல்வன்’ பூங்குழலி ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர் நடித்து வருகின்றனர். விஷ்ணுவிஷால் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் ஜஸ்டின் பிரபாகரன் இசையில், ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவில் பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகி வருகிறது.