close
Choose your channels

விஷ்ணு விஷால் அடுத்த படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்

Sunday, February 4, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஷ்ணு விஷால் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து அந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்துள்ள ’லால் ஸ்லாம்’ திரைப்படம் வரும் 9ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி சமீபத்தில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் அவருடன் இன்னொரு மாஸ் நடிகர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி நடிகர் விஷ்ணு விஷால், இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அருண் ராஜா காமராஜ் ஏற்கனவே ’கனா’ ’நெஞ்சுக்கு நீதி’ ஆகிய திரைப்படங்களையும் ’லேபிள் என்ற ஹாட்ஸ்டார் வெப் தொடரையும் இயக்கிய நிலையில் அவருடைய அடுத்த படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாக தெரிகிறது.

இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.