விஷ்ணுவிஷாலின் அடுத்த படம்: இன்று முதல் படப்பிடிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ’காடன்’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் மார்ச் 26ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்தது
இந்த நிலையில் சற்று முன்னர் விஷ்ணு விஷால் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் பூஜை உடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த திரைப்படம் ’மோகன்தாஸ்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் பூஜை இன்று சென்னையில் தொடங்கியது. முரளி கார்த்திக் என்பவர் இயக்க இருக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் இந்திரஜித் சுகுமாரன் என்பவர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
சுந்தரமூர்த்தி இசையமைக்கும் இந்த படத்திற்கு விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவும் கிருபாகரன் படத்தொகுப்பும் செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் அன்பறிவ் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணிபுரிய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#MohandasShootBegins
— VishnuuVishalStudioz (@VVStudioz) March 5, 2021
Pictures from the pooja of #Mohandas??. All the main members of the team in one place. Shoot from today!@TheVishnuVishal @aishu_dil @Indrajith_S @im_the_TWIST @24frps @SundaramurthyKS @editorkripa @anbariv @thanga18 @shravanthis111 @proyuvraaj @divomovies pic.twitter.com/M5j4Q9TXVh
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments