விஷ்ணு விஷால் அடுத்த படத்தை இயக்கும் விஜய் சேதுபதி-கார்த்தி பட இயக்குனர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் சேதுபதி மற்றும் கார்த்தி படங்களை இயக்கிய இயக்குனரின் அடுத்த படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி நடித்த ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘ஜூங்கா’ மற்றும் கார்த்தி நடித்த ’காஷ்மோரா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் கோகுல். இவரது இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்த ’சிங்கப்பூர் சலூன்’ என்ற திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது
இந்நிலையில் இயக்குனர் கோகுல் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விஷ்ணு விஷால் தனது சமூக வலைத்தளத்தில் ’இயக்குனர் கோகுல் அவர்கள் தான் தனது படத்தை இயக்க இருப்பதாகவும் அவருடன் இணைவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் கூறிய உண்மை கதையை ஒட்டிய ஒரு ஸ்கிரிப்டை கேட்டவுடன் நான் ஆச்சரியமடைந்தேன் என்றும் இந்த படம் கண்டிப்பாக ஒரு அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்றும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தை விஷ்ணு விஷாலின் சொந்த நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Extremely happy to share the official announcement of my next - joining hands with @DirectorGokul for a BADASS entertainer ❤️
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) January 8, 2024
Got really excited on hearing this wacky, high octane action script based on a true story. Can't wait to get started soon. #VVStudioz10#RiseandShine… pic.twitter.com/Row3hgfE74
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments