இதற்காக மூன்று வருடங்கள் காத்திருந்தேன்: விஷ்ணு விஷாலின் வைரல் டுவிட்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் இளைதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் தற்போது ’எப்.ஐ.ஆர்’ மற்றும் ’மோகன்தாஸ்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்ததாக ஒரு புதிய படத்திற்கு விஷ்ணுவிஷால் பூஜை போட்டு உள்ளார். இந்த படத்தின் திரைக்கதைக்காக தான் 3 வருடங்கள் காத்திருந்ததாகவும் இந்தப் படம் மிகச் சிறந்த எண்டர்டெய்னர் படம் என்றும் அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற இந்த படத்தின் பூஜை குறித்த புகைப்படத்தை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக ஷ்ரவந்தி சதீஷ் என்பவர் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை விஷ்ணு விஷால் இயக்குகிறாரா? அல்லது ஏற்கனவே இயக்குனரை முடிவு செய்துவிட்டாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த படம் விஷ்ணு விஷாலுக்கு ’ராட்சசன்’ போன்ற ஒரு வெற்றியை கொடுக்கும் என்று கோலிவுட் திரையுலகினர் கூறிவருகின்றனர்.
START TO A NEW PROJECT....
— VISHNU VISHAL - V V (@TheVishnuVishal) August 2, 2021
DETAILS ONCE TITLE IS CONFIRMED...@VVStudioz @shravanthis111
A very good entertainer...
The only script ive held on to for 3 years to make it at the right time...#positivity pic.twitter.com/qyGuTdBH4b
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments