close
Choose your channels

இது முழுக்க முழுக்க வதந்தி.. மறுப்பு தெரிவித்த விஷ்ணு விஷால் பட இயக்குனர்..!

Thursday, March 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிக்க இருந்த ’கொரோ குமார்’ என்ற திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தி என இயக்குனர் கோகுல் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘கொரோனா குமார்’ என்ற படம் உருவாக இருந்தது என்பதும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருந்ததாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் இயக்குனர் கோகுல், விஷ்ணு விஷால் நடிக்கும் படத்தை இயக்குவதற்கு ஒப்புக்கொண்டார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் இந்த படம் தான் ‘கொரோனா குமார்’ படம் என்றும், சிம்புவுக்கு பதில் விஷ்ணு விஷால் நடிக்கிறார் என்று சமீப காலமாக செய்திகள் வெளியான நிலையில் இந்த செய்திக்கு இயக்குனர் கோகுல் தரப்பினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

’கட்டா குஸ்தி’ திரைப்படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் நிறுவனம் தயாரிக்கும் படத்தை கோகுல் இயக்குகிறார், இந்த படம் ஆக்சன் என்டர்டெயின்மென்ட் படம், இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது, இந்த படத்திற்கும் ‘கொரோனா குமார்’ படத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

எனவே ‘கொரோனா குமார்’ கதையில் விஷ்ணு விஷால் நடிக்கப் போவதாக வெளியான செய்திகள் முழுக்க முழுக்க வதந்தி என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment