நடிகர் விஷ்ணு விஷாலின் நிர்வாண புகைப்படங்கள்: எடுத்தது அவரது மனைவியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சமீபத்தில் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு போட்டியாக நடிகர் விஷ்ணு விஷாலும் கிட்டத்தட்ட நிர்வாண புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்களை அவரது மனைவி ஜூவாலா கட்டா எடுத்ததாக அவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால் என்பதும் சுசீந்திரன் இயக்கிய ’வெண்ணிலா கபடி குழு’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி அதன்பின் ’குள்ளநரிக்கூட்டம்’ ’நீர்ப்பறவை’ ‘முண்டாசுப்பட்டி’ ’இன்று நேற்று நாளை’ ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் மூன்று படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா என்பவரை விஷ்ணுவிஷால் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்னர் விஷ்ணுவிஷால் சில புகைப்படங்களை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். கிட்டத்தட்ட நிர்வாண போஸில் இருக்கும் இந்த புகைப்படங்களை அவர் தனது மனைவி ஜுவாலா கட்டா எடுத்ததாக அவர் கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன.
Well... joining the trend !
— VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) July 23, 2022
P.S
Also when wife @Guttajwala turns photographer... pic.twitter.com/kcvxYC40RU
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments