விஷ்ணுவிஷாலின் 'கட்டா குஸ்தி'; தமிழகத்தில் வெளியிடுவது யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ‘கட்டா குஸ்தி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து வரும் டிசம்பர் மாதம் 2ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தமிழகத்தில் வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விஷ்ணு விஷால் நடித்த ‘எஃப்.ஐ.ஆர்’ திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது அவருடைய அடுத்த படமான ‘கட்டா குஸ்தி’ படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தமிழகத்தில் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இதனை அடுத்து இந்த படத்திற்கு அதிக திரையரங்குகளில் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விஷ்ணு விஷால் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் ராணா நடித்த இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி உள்ளது . தமிழில் ’கட்டா குஸ்தி’ மற்றும் தெலுங்கில் ’மட்டி குஸ்தி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
After the success of #FIR, we’re happy to join hands with @TheVishnuVishal again. #GattaKusthi releasing on Dec 2nd, in cinemas near you.@VVStudioz @RaviTeja_offl @RTTeamWorks #AishwaryaLekshmi @ChellaAyyavu @Richardmnathan @justin_tunes @editor_prasanna @anbariv @thanga18 pic.twitter.com/TVoagmqtsa
— Red Giant Movies (@RedGiantMovies_) November 18, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments