விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,November 11 2022]

விஷ்ணு விஷால் நடித்த ’கட்டா குஸ்தி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் இருப்பதாகவும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சற்று முன் இந்த படம் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு பிரபல தெலுங்கு நடிகர் ராணா நடித்த இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி உள்ளது என்றும் தமிழில் ’கட்டா குஸ்தி’ மற்றும் தெலுங்கில் ’மட்டி குஸ்தி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.