விஷ்ணு விஷாலின் 'எஃப்.ஐ.ஆர்' ரிலீஸ் தேதி குறித்த தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷ்ணு விஷால் நடித்த ‘எஃப்.ஐ.ஆர்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படம் பிப்ரவரி மாதம் ரிலீஸாகும் என விஷ்ணு விஷால் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ள நிலையில் இந்தப் படம் பிப்ரவரி 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் விஷ்ணு விஷால் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
அதிரடி ஆக்சன் திரைப்படமான ‘எஃப்.ஐ.ஆர்’ திரைப்படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக ரெபா மோனிகா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் மஞ்சிமா மோகன், கவுதம்மேனன், பிக்பாஸ் ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும் இந்த படத்தை மனு ஆனந்த் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு அஸ்வத் இசை அமைத்துள்ளார் என்பதும் இந்த படத்தின் சிங்கிள் பாடல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்பதும் தெரிந்ததே.
Thank you so much da...
— VISHNU VISHAL - V V (@TheVishnuVishal) January 27, 2022
The wait is gettin tuffer n tuffer to show people our work..
But im sure the wait will be worth it ..#FIR...
Release date will be announced soon based on the situation :) https://t.co/OpBFzyKOM4
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments