முடிவுக்கு வந்தது விஷ்ணு விஷாலின் அடுத்த படம்: விரைவில் ரிலீஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் நடிப்பில் ’ராட்சசன்’ மற்றும் ’சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வெற்றியைப் பெற்றது. அதன்பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக அவர் நடித்த எந்த படமும் வெளிவராத நிலையில் தற்போது அவர் நடித்துக் கொண்டிருந்த திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்துள்ளது. இதனை அடுத்து இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
விஷ்ணு விஷால் தற்போது ’காடன்’ ’ஜெகஜாலக்கில்லாடி’ ’எஃப்ஐஆர்’ மற்றும் ’மோகன்தாஸ்’ ஆகிய நான்கு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றில் ’எஃப்ஐஆர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விஷ்ணு விஷால் தனது பட குழுவினருடன் இணைந்து படப்பிடிப்பு முடிவடைந்ததை குறிக்கும் வகையில் கேக் வெட்டி கொண்டாடினார்
இந்த நிலையில் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பமாகி விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை விஷ்ணு விஷால் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படம் குறித்து விஷ்ணுவிஷால் கூறுகையில், என்னுடைய மிகப்பெரிய பட்ஜெட் படம் இது. பட்ஜெட் மட்டுமின்றி ஆக்சன், தயாரிப்பு, லொகேஷன் மற்றும் கண்டெண்ட் என அனைத்துமே இந்த படத்தில் பிரமாண்டம் தான். இந்த படத்திற்காக 80 நாட்கள் கடுமையாக பணிபுரிந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இன்று தனது மகனின் பிறந்த நாளில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது என்றும் விஷ்ணுவிஷால் குறிப்பிட்டுள்ளார்.
#FIR#FIRWrapped
— VISHNU VISHAL - stay home stay safe (@TheVishnuVishal) January 31, 2021
ITS A WRAPP!!
My biggest movie in terms of budget,action,scale,production,locations n of course CONTENT.
80 days of hardwork(120+ callsheets)
Kudos to @itsmanuanand @shravanthis111 n @VVStudioz
Its my son #ARYANS birthday as well.
Need your love??.. pic.twitter.com/A9xE1wh214
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout