விஷ்ணு விஷாலின் கப்பிங் தெரபி: ஆச்சரிய புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Friday,June 11 2021]

சமீபத்தில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை திருமணம் செய்துகொண்ட தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால், அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பது தெரிந்ததே. திரைப்படத்தின் ஒரு கேரக்டருக்காக மிகவும் மெனக்கிடும் தமிழ் சினிமா நடிகர்களில் விஷ்ணுவிஷால் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கப்பிங் தெரபி செய்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியத்தக்க வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சீனாவின் பழங்கால மார்ஷியல் ஆர்ட்ஸ்களில் ஒன்றான கப்பிங் தெரபியை ஹாலிவுட் பிரபலங்களான கிம் கர்தாஷியன், ஜெனிபர் அனிஸ்டன் உள்பட பலர் கடைப்பிடித்து வரும் நிலையில் தற்போது இந்த கப்பிங் தெரபியை கோலிவுட் நடிகர் விஷாலும் பின்பற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.