தரக்குறைவாக விமர்சனம் செய்த நபருக்கு பதிலடி கொடுத்த விஷ்ணுவிஷாலின் கேர்ள் பிரண்ட்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஷ்ணுவிஷாலின் கேர்ள் பிரண்ட் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா என்பது தெரிந்ததே. இருவரும் பரஸ்பரம் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பது உள்பட இருவரும் இணைந்த பல புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரசிகர் ஒருவரின் தரக்குறைவான விமர்சனத்திற்கு ஜூவாலா கட்டா பதிலடி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் தெய்வம் ஒன்றின் கையில் இருக்கும் கொடியில் சானிடரி நாப்கின் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட ஜூவாலா, ‘பீரியட்ஸ் ஆர் கூல்’ என்று பதிவு செய்திருந்தார்.
இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் அளித்த ஒருவர், ஜூவாலாவின் தாயார் குறித்து அச்சில் வெளியிட முடியாத தரக்குறைவான ஒரு கருத்தை பதிவுசெய்திருந்தார். இதனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த ஜூவாலா, ‘இவர் போன்ற நபர்கள் சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். ஆன்லைனில் இவ்வளவு வன்முறையாக இருக்கும் இவர் போன்றவர்கள் ஆஃப்லைனிலும் பயங்கரமானவர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜூவாலா கட்டாவின் இந்த தைரியமான கருத்துக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவதோடு, அவருக்கு ஆதரவாக பல்வேறு கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது
These kind of people exist...if they are so violent online they are capable of any kind of violence offline as well...they need to be called out!! pic.twitter.com/E3GZJyNheJ
— Gutta Jwala (@Guttajwala) July 23, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments