நாங்கள் எடுத்து கொண்ட முதல் புகைப்படம்.. திருமண நாளில் விஷ்ணு விஷாலின் பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஷ்ணு விஷால் இன்று தனது திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் தனது மனைவியுடன் எடுத்த முதல் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் கடந்த 2009 ஆம் ஆண்டு ’வெண்ணிலா கபடி குழு’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு அவர் ’குள்ளநரி கூட்டம்’ ’நீர்ப்பறவை’ ’முண்டாசுப்பட்டி’ ’இன்று நேற்று நாளை’ ’ராட்சசன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். இந்த ஆண்டு கூட அவர் நடித்த ‘லால்சலாம்’திரைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் ஜுவாலா கட்டா என்ற பேட்மிண்டன் வீராங்கனையை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த திருமணம் ஹைதராபாத்தில் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி நடந்தது
இந்த நிலையில் திருமணம் ஆகி இன்றுடன் மூன்று வருடங்கள் நிறைவு பெறுவதை அடுத்து விஷ்ணு விஷால் தனது சமூக வலைத்தளத்தில் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முதல் புகைப்படம் என்றும் இந்த மூன்று வருடத்தில் எங்களுடைய உறவு மிகவும் வலிமை அடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்
எங்களது நட்பு ஏழு வருடங்கள் கொண்டது என்றும் மூன்றாவது திருமண நாளை கொண்டாடி வருகிறோம் என்று விஷ்ணு விஷால் குறிப்பிட்ட நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Happy 3rd wedding anniversary to us @Guttajwala
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) April 22, 2024
Through thick n thin ..
7 years of bond🥰
Our first pictures together...
👁️👁️👁️ pic.twitter.com/y2QofD2Wm6
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments