ராட்சசன்' படத்திற்கு விருது கிடைக்காதது ஏன்? விஷ்ணுவிஷால் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் ஒருசில படங்களே சூப்பர்ஹிட் ஆன நிலையில் அவற்றில் ஒரு படமாக விஷ்ணுவிஷாலின் 'ராட்சசன்' படம் அமைந்தது என்பது தெரிந்ததே. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தற்போது இந்த படம் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது
இந்த நிலையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது மற்றும் சைமா விருது பட்டியலில் ராட்சசன்' படத்திற்கு ஒருவிருது கூட கிடைக்கவில்லை. இதனையடுத்து ரசிகர்கள் தங்களுடைய ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து விஷ்ணுவிஷால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். 'ராட்சசன்' திரைப்படம் எந்த ஒரு விருதுக்கும் அனுப்பப்படவில்லை என்றும், மக்கள் இந்த படத்தை வெற்றிப்படமாக்கியதே எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய விருது என்றும், அந்த விருதை தாண்டி எந்த விருதையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்கள் காட்டிய அன்புக்கு நன்றி என்றும் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
'ராட்சசன்' திரைப்படம் விருதுக்கு அனுப்பப்பட்டிருந்தால் வில்லன் கிறிஸ்டோபர் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோர்களுக்கு விருதுகள் கிடைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என பல் சமூக வலைத்தள பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments