10 வருடங்களுக்கு பின் மீண்டும் களமிறங்கிய விஷ்ணுவிஷால் பட இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷ்ணு விஷால், ரம்யா நம்பீசன் நடித்த ’குள்ளநரி கூட்டம்’ படத்தை இயக்கிய ஸ்ரீபாலாஜி என்பவர் பத்து வருடங்களுக்கு பின் மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். குள்ளநரி கூட்டம் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் அவருக்கு அடுத்த வாய்ப்பு கிடைக்க 10 வருடம் ஆகி உள்ளது
தற்போது அவர் ’சூனா பானா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தடைபட்டது. இந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசு திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி அளித்ததை அடுத்து தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது
இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சாம்ஸ் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, ‘ஆரம்பமானது சூட்டிங்... உற்சாகம் களைகட்டியது. "கேப்சர் மீடியா கிரியேசன்ஸ் நிறுவனத்திற்காக திரு நந்த கோபால் அவர்கள் தயாரிக்க " குள்ளநரி கூட்டம்" புகழ் திரு ஸ்ரீ பாலாஜி அவர்கள் இயக்கும் "சுநா பாநா" (Suna Pana). திண்டுக்கல்லில் பரபரப்பாக உருவாகி வருகிறது. தமிழக அரசிற்கு நன்றிகள் கோடி’ என்று கூறியுள்ளார். மேலும் இந்த படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
அறிமுக நாயகன் நிஜய் நடிக்கும் இந்த திரைப்படத்தில் அப்புகுட்டி, சாம்ஸ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது
❤️ஆரம்பமானது சூட்டிங்...
— @ACTOR CHAAMS (@ACTOR_CHAAMS) September 1, 2020
உற்சாகம் களைகட்டியது.
"CAPTURE MEDIA CREATION காக திரு நந்த கோபால் அவர்கள் தயாரிக்க " குள்ளநரி கூட்டம்" புகழ் திரு ஸ்ரீ பாலாஜி அவர்கள் இயக்கும் "சுநா பாநா" (Suna Pana). திண்டுக்கல்லில் பரபரப்பாக உருவாகி வருகிறது.
தமிழக அரசிற்கு நன்றிகள் கோடி
?? pic.twitter.com/GyvbzfRYY9
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com