10 வருடங்களுக்கு பின் மீண்டும் களமிறங்கிய விஷ்ணுவிஷால் பட இயக்குனர்

  • IndiaGlitz, [Friday,September 04 2020]

விஷ்ணு விஷால், ரம்யா நம்பீசன் நடித்த ’குள்ளநரி கூட்டம்’ படத்தை இயக்கிய ஸ்ரீபாலாஜி என்பவர் பத்து வருடங்களுக்கு பின் மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். குள்ளநரி கூட்டம் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் அவருக்கு அடுத்த வாய்ப்பு கிடைக்க 10 வருடம் ஆகி உள்ளது
தற்போது அவர் ’சூனா பானா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தடைபட்டது. இந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசு திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி அளித்ததை அடுத்து தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது

இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சாம்ஸ் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, ‘ஆரம்பமானது சூட்டிங்... உற்சாகம் களைகட்டியது. கேப்சர் மீடியா கிரியேசன்ஸ் நிறுவனத்திற்காக திரு நந்த கோபால் அவர்கள் தயாரிக்க குள்ளநரி கூட்டம் புகழ் திரு ‌ ஸ்ரீ பாலாஜி அவர்கள் இயக்கும் சுநா பாநா (Suna Pana). திண்டுக்கல்லில் பரபரப்பாக உருவாகி வருகிறது. தமிழக அரசிற்கு நன்றிகள் கோடி’ என்று கூறியுள்ளார். மேலும் இந்த படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அறிமுக நாயகன் நிஜய் நடிக்கும் இந்த திரைப்படத்தில் அப்புகுட்டி, சாம்ஸ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது
 

More News

சிவகார்த்திகேயனின் 'ஊதா கலர் ரிப்பனுக்கு' அடிமையான அண்டை மாநில சூப்பர் ஸ்டார்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் இடம்பெற்ற 'ஊதா கலரு ரிப்பன்' என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும்

திருமண மண்டபமாக மாறுகிறது ஏவிஎம் ஸ்டுடியோவின் ஒரு பகுதி! பரபரப்பு தகவல்

ஏவிஎம் ஸ்டுடியோவின் ஒரு பகுதி ஏற்கனவே அடுக்குமாடி குடியிருப்பாக மாறிவிட்ட நிலையில் சமீபத்தில் ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் மூடப்பட்டது

ஆன்லைன் வகுப்பில் பிரபலமான டீச்சருக்கு சினிமா வாய்ப்பு: அதன்பின் நிகழ்ந்த விபரீதம்!

ஆன்லைன் வகுப்பின் மூலம் மாநிலம் முழுவதும் பிரபலமான ஆசிரியை ஒருவருக்கு சினிமா வாய்ப்பு வந்த நிலையில் அவர் அந்த சினிமா வாய்ப்பை மறுத்ததால் ஏற்பட்ட விபரீதம்

நான்கு வருடங்களாக முடங்கி இருக்கும் படத்தை தூசு தட்டும் சந்தானம்: விரைவில் ரிலீஸ்!

காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக பதவி உயர்வு ஆனபின் சந்தானம் ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்ட படங்களில் ஒன்று 'மன்னவன் வந்தானடி'. பிரபல இயக்குனர் செல்வராகவன்

வாட்ஸ் அப்பில் கடைசி ஸ்டேட்டஸ்: அரசுப்பள்ளி ஆசிரியை தூக்கில் தொங்கி தற்கொலை

தான் யாருக்கும் பாரமாக இருக்க போவதில்லை என வாட்ஸ்அப்பில் கடைசியாக ஒரு ஸ்டேட்டஸை பதிவு செய்துவிட்டு அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவர் தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது