'லால்சலாம்' கொண்டாட்டத்தில் மனைவியுடன் விஷ்ணு விஷால்.. வைரல் புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடிக்கும் ’லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் தனது காட்சியின் படப்பிடிப்பை ரஜினிகாந்த் முடித்தார் என்பதையும் பார்த்தோம்.
அதன் பின்னரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் காட்சிகள் படப்பிடிப்பை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரஜினியை அடுத்த தற்போது விஷ்ணு விஷால் தனது காட்சிகள் படப்பிடிப்பை முடித்து விட்டதாக சமூக வலை தளத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
’லால் சலாம்’ படத்தில் எனது கேரக்டர் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. என்ன ஒரு பயணம் இது.. உணர்ச்சிகள் நிரம்பி வழிகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நிறைய கற்றுக் கொண்டேன். எனது இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு, தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்திற்கு எனது நன்றி, இந்த படம் எனக்கு மறக்க முடியாத ஒரு பயணம்’ என்று தெரிவித்துள்ளார்.
விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா, தம்பி ராமையா, செந்தில் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இசை புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
And its a wrap for me for #LalSalaam
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) August 5, 2023
What a journey this has been…
Emotional and overwhelmed..
Learnt so much..
Thanks to my director @ash_rajinikanth and @LycaProductions for this memorable journey❤️❤️ pic.twitter.com/lARO6zKe0w
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments