'எப்.ஐ.ஆர்' ரிலீஸ்: மலேசியா, கத்தர், குவைத் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விஷ்ணு விஷால்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷ்ணு விஷாலின் 'எப்.ஐ.ஆர்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் டிரைலர் மற்றும் டீசர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் முதல் நாள் வசூல் திருப்திகரமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் கத்தார், மலேசியா மற்றும் குவைத் நாட்டின் ரசிகர்களிடம் நடிகர் விஷ்ணு விஷால் தனது மன்னிப்பை கோரியுள்ளார். 'எப்.ஐ.ஆர்’ திரைப்படம் மலேசியா, குவைத், மற்றும் கத்தார் நாடுகளில் தடை செய்யப்பட்டிருப்பதாக வெளி வந்திருக்கும் தகவலை அடுத்து விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டு உள்ளார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் மற்ற நாடுகளில் நாளை பிரமாண்டமாக 'எப்.ஐ.ஆர்’ திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஷ்ணு விஷால், ரெபா மோனிகா, கௌதம் மேனன், மஞ்சிமா மோகன், பார்வதி, கௌரவ் நாராயணன், ரைசா வில்சன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை மனு ஆனந்த் இயக்கி உள்ளார். அஸ்வத் இசையில், அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் 'எப்.ஐ.ஆர்’ திரைப்படம் உருவாகியுள்ளது.
??????
— IRFAN AHMED (ABA) (@TheVishnuVishal) February 10, 2022
Sorry #MALAYSIA and #KUWAIT audience... https://t.co/mUDZA3mJK4
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments