நடிகர் விஷ்ணு விஷால் விவாகரத்து: அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,November 13 2018]

கோலிவுட் திரையுலகில் இளம் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு. 'வெண்ணிலா கபடிக்குழு' முதல் 'ராட்சசன்' வரை பல வெற்றிப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டவர். இவருக்கு ரஜினி என்ற மனைவியும் ஆர்யன் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் இன்று விஷ்ணு விஷால் தனது மனைவியுடனான விவாகரத்து குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து விஷ்ணு விஷால் பத்திரிகையாளர்களுக்கு அனுப்பிய அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

நானும் ரஜினியும் கடந்த ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்கிறோம். இப்போது எங்களுக்கு சட்டபூர்வமாக விவாகரத்து கிடைத்துள்ளது. எங்களுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தைக்கு இனியும் நாங்கள் நல்ல பெற்றோர்களாகக இருப்பதே எங்களுடைய முக்கிய பொறுப்பு. அவனுக்கு தேவையானதை நாங்கள் செய்வோம்.

நாங்கள் சில ஆண்டுகளை இனிமையாக சேர்ந்தே கழித்துள்ளோம். இனியும் நல்ல நண்பர்களாக வாழ்வோம் என்றே நினைக்கின்றேன். ஒருவொருக்கொருவர் நன்மதிப்பை தருவோம். எங்கள் குழந்தை மற்றும் எங்கள் குடும்பங்களின் நலன் கருதி எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் சுதந்திரத்தை மதிக்குமாறு அனைவரையும் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.