நடிகர் விஷ்ணு விஷால் விவாகரத்து: அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,November 13 2018]

கோலிவுட் திரையுலகில் இளம் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு. 'வெண்ணிலா கபடிக்குழு' முதல் 'ராட்சசன்' வரை பல வெற்றிப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டவர். இவருக்கு ரஜினி என்ற மனைவியும் ஆர்யன் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் இன்று விஷ்ணு விஷால் தனது மனைவியுடனான விவாகரத்து குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து விஷ்ணு விஷால் பத்திரிகையாளர்களுக்கு அனுப்பிய அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

நானும் ரஜினியும் கடந்த ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்கிறோம். இப்போது எங்களுக்கு சட்டபூர்வமாக விவாகரத்து கிடைத்துள்ளது. எங்களுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தைக்கு இனியும் நாங்கள் நல்ல பெற்றோர்களாகக இருப்பதே எங்களுடைய முக்கிய பொறுப்பு. அவனுக்கு தேவையானதை நாங்கள் செய்வோம்.

நாங்கள் சில ஆண்டுகளை இனிமையாக சேர்ந்தே கழித்துள்ளோம். இனியும் நல்ல நண்பர்களாக வாழ்வோம் என்றே நினைக்கின்றேன். ஒருவொருக்கொருவர் நன்மதிப்பை தருவோம். எங்கள் குழந்தை மற்றும் எங்கள் குடும்பங்களின் நலன் கருதி எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் சுதந்திரத்தை மதிக்குமாறு அனைவரையும் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

நடிகரை மறுமணம் செய்யும் செளந்தர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 2வது மகளும், 'கோச்சடையான்', 'விஐபி 2' படங்களின் இயக்குனருமான செளந்தர்யா, கடந்த 2010ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்தார்.

இலவசங்கள் குறித்து 'சர்கார்' படத்திற்கு எதிரான கருத்தை கூறிய ரஜினி

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் சமீபத்தில் வெளியானபோது இந்த படத்தில் 'இலவசங்களை கொடுத்து மக்களை அரசியல்வாதிகள் சீரழித்து கொண்டிருக்கின்றனர்

பிரதமர் மோடி பலசாலியா? என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் அளித்த பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தின் முன் செய்தியாளர்களை சந்தித்தார். 'எந்த 7 பேர் என்பது குறித்த சர்ச்சைக்கும், பாஜக ஆபத்தான கட்சியா?

'எந்த 7 பேர்' என்பது குறித்த சர்ச்சைக்கு ரஜினிகாந்த் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எந்த ஒரு பேட்டி அளித்தாலும் அந்த பேட்டியில் உள்ள ஒரு சிறுகுறை பெரிதாக்குவது, அல்லது அவர் சொன்னதை திரித்து கூறி பரபரப்பை ஏற்படுத்துவது என்பது

ரஜினி தெரிவித்த கருத்து சரிதான்: முதலமைச்சர் பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு நிமிடங்கள் பேட்டி அளித்தால் ஒருசில ஊடகங்கள் அந்த பேட்டியை திரித்து செய்தியாக வெளியிட்டு இரண்டு நாட்கள் விவாதம் நடத்தும் நிலை காணப்படுகிறது.