'எதிர்பாராததை எதிர்பாருங்கள்': அடுத்த படத்தின் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட விஷ்ணு விஷால்..!

  • IndiaGlitz, [Saturday,February 17 2024]

நடிகர் விஷ்ணு விஷால் தனது அடுத்த படத்தின் சூப்பர் அப்டேட்டை வெளியிட்டுள்ள நிலையில் அது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால், ராம்குமார் நடிப்பில் உருவான ’ராட்சசன்’ என்ற வெற்றி படத்திற்கு நடித்த பின்னர் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் ’ராட்சசன்’ படத்திற்கு பிறகு இயக்குனர் ராம்குமார் ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் விஷ்ணு விஷாலுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் என்பதையும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது கொடைக்கானலில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ராம்குமார் உடன் கொடைக்கானலில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்று இந்த புகைப்படத்துக்கு கேப்ஷனாக குறிப்பிட்டுள்ள விஷ்ணு விஷால், மீண்டும் ராம்குமார் உடன் இணைந்துள்ளது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த படமும் ’ராட்சசன்’ படம் போடவே வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

அரசியல் கட்சி பெயரை மாற்றுகிறாரா விஜய்? புதிய பெயர் என்ன?

தளபதி விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் தற்போது இந்த கட்சியின் பெயரில் சிறு மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கணவரை பிரிஞ்ச உங்களோட அறிவுரை தேவையில்லை.. ரசிகரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த சமந்தா..!

கணவரை பிரிந்து வாழும் உங்களுடைய அறிவுரை எங்களுக்கு தேவையில்லை என ரசிகர் ஒருவர் கூறியதற்கு நடிகை சமந்தா பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பவானி ஆறு சர்ச்சையை மறுத்த போலீசார்.. புது விளக்கம் அளித்துள்ள பாக்யராஜ்..!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர், இயக்குனர் பாக்யராஜ் வெளியிட்ட வீடியோவில் பவானி ஆற்றில் குளிக்க செல்லும் சில சுற்றுலா பயணிகளை அங்குள்ள சிலர் வேண்டுமென்றே தண்ணீரில் மூழ்கடித்து

90s கிட்ஸ்களை கவர்ந்த விளம்பர நடிகை.. புற்றுநோயால் பரிதாப மரணம்..!

கடந்த 90களில் சர்ப் எக்ஸெல் என்ற விளம்பரத்தின் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமான நடிகை புற்றுநோயால் காலமானதை அடுத்து ரசிகர்கள் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திரையில் தான் வில்லன்.. நிஜத்தில் ஹீரோவான 'குக் வித் கோமாளி' டைட்டில் வின்னர்..!

திரையில் வில்லனாக நடித்த நம்பியார் முதல் பல நடிகர்கள் நிஜத்தில் ஹீரோவாகி செய்த சாதனைகள் பலர் அறிந்தது. அந்த வகையில் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்த குக் வித் கோமாளி