பேட்மிண்டன் வீராங்கனையுடன் விஷ்ணுவிஷால்: வைரலாகும் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘எப்.ஐ.ஆர்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் டீசர் சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த படம் வெளியானால் வெற்றி உறுதி என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது
இந்த நிலையில் இந்த டீசருக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பிற்கு நன்றி தெரிவித்து விஷ்ணு விஷால் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விரைவில் இந்த டீஸர் 2 மில்லியன் பார்வையாளர்களை பெற இருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் இந்த படத்தின் டீசருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றும் அவர் கூறியுள்ளார்
இந்த வீடியோவில் விஷ்ணு விஷால் அருகில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா உள்ளார் என்பதும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. விஷ்ணு விஷால் மற்றும் ஜூவாலா கட்டா விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக ஒரு வதந்தி கோலிவுட்டில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
விஷ்ணு விஷால் ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் ரைசா வில்சன்,’பிகில்’ புகழ் ரெபா மோனிகா உள்பட பலர் நடித்துள்ளனர். மனு ஆனந்த் இயக்கத்தில், அஸ்வந்த் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் மற்றும் இயக்குனர் கௌரவ் நாராயணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#FIRteaser is going to touch 2 million soon...thank you all for the wonderful feedback frm all over...have gone through each and every tweet?????? pic.twitter.com/WKkRx23Lj0
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) January 27, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com