close
Choose your channels

மாஸ் மகராஜாவுடன் விஷ்ணு விஷால்: மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

Tuesday, April 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு பிரபல நடிகர் ரவி தேஜா ஆகிய இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

ரவி தேஜாவுடன் இணைந்த புகைப்படம் ஒன்றை விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பதிவு செய்து மாஸ் மகாராஜா ரவிதேஜாவுடன் நடிக்க உள்ளேன் என்றும் அவருடன் நடந்த இந்த சந்திப்பில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது, தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்த படத்தின் தமிழ் டைட்டில் ’கட்டா குஸ்தி’ எனவும், தெலுங்கில் ’மட்டி குஸ்தி’ எனவும் வைக்கப்பட்டுள்ளது.

விஷ்ணுவிஷால் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படம் ஜஸ்டின் பிரபாகரன் இசையில், ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவில் பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகவுள்ளது. இந்த படத்தை செல்லா அய்யாவு என்பவர் இயக்கவிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment