close
Choose your channels

தமிழ்நாடு பசங்க மாதிரி அப்பாவி பசங்க எங்கேயும் கிடைக்க மாட்டாங்க.. 'கட்டா குஸ்தி' டிரைலர்

Sunday, November 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு பிரபல நடிகர் ராணா நடித்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் வரும் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட இருப்பதை அடுத்து இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ‘கட்டா குஸ்தி’ படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகிய இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அப்பாவியான, அடக்கமான பெண்ணை திருமணம் செய்ய விரும்பும் விஷ்ணு விஷாலுக்கு குஸ்தி போடும் ஒரு பெண் மனைவியாக கிடைத்துள்ளதை இந்த தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சனை என்ன என்பதை காமெடியாக சொல்லும் படம் தான் ‘கட்டா குஸ்தி’ என டிரைலரில் இருந்து தெரிய வருகிறது. காமெடி, குடும்ப செண்டிமெண்ட் மற்றும் ஆக்சன் கலந்த ஜனரஞ்சகமான படம் என்பதால் இந்த படம் நிச்சயம் விஷ்ணுவிஷாலுக்கு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, ராணா உள்பட பலர் நடித்த இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி உள்ளது . தமிழில் ’கட்டா குஸ்தி’ மற்றும் தெலுங்கில் ’மட்டி குஸ்தி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment