மீண்டும் இணையும் ராட்சசனின் ராசியான ஜோடி!

  • IndiaGlitz, [Thursday,August 22 2019]

கடந்த ஆண்டு வெளியான வெற்றி படங்களில் ஒன்று 'ராட்சசன்'. விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் வெளியான இந்த த்ரில் சஸ்பென்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 'ராட்சசன்' படத்தில் இணைந்து நடித்து வெற்றி ஜோடி என்ற புகழ்பெற்ற விஷ்ணு விஷால், அமலாபால் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஹிட் வெற்றி பெற்ற 'ஜெர்ஸி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். கிரிக்கெட் சம்பந்தப்பட்ட இந்த படத்தில் நானி, ஷராதா ஸ்ரீநாத் நடித்திருந்த நிலையில் நானி கேரக்டரில் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் ஷராதா ஸ்ரீநாத் கேரக்டரில் அமலாபால் நடிக்கவிருப்பதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறப்படுகிறது.

எஸ்.ஜே.சூர்யா நடித்த 'மான்ஸ்டர்' படத்தை இயக்கிய வெங்கடேசன் இயக்கும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாக தெரிகிறது. நடிகர் விஷ்ணு விஷால் உண்மையிலேயே ஒரு கிரிக்கெட் வீரர் என்பதும் ஏற்கனவே அவர் 'ஜீவா' என்னும் கிரிக்கெட் கதையம்சம் கொண்ட படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'சாஹோ' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள 'சாஹோ' திரைப்படம் வரும் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகின்றன

தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம்? மதுமிதாவின் அதிரடி பேட்டி

மதுமிதா டாஸ்க் ஒன்றின்போது சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியதாகவும், அதனையடுத்து அவர் தற்கொலைக்கு முயன்று பிக்பாஸ் விதிகளை மீறியதால் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இவங்களுக்கு பயந்து உயிரை விடனுமா? த்ரிஷாவின் 'கர்ஜனை' டிரைலர்!

த்ரிஷா நடித்த அதிரடி ஆக்சன் திரைப்படமான 'கர்ஜனை' திரைப்படம் நீண்ட காலதாமதத்திற்கு பின் தற்போது விரைவில் ரிலீஸாகும் நிலையில் உள்ளது.

'ஜித்தன்' ரமேஷின் அடுத்த பட டைட்டில் மற்றும் டீசர் வெளியீடு

'ஜித்தன்' படத்தின் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரியான நடிகர் ரமேஷ் அதன்பின் விஜய்யின் 'ஜில்லா' உள்பட ஒருசில படங்களில் நடித்தார். கடந்த 2016ஆம் ஆண்டு இவரது நடிப்பில் 'ஜித்தன் 2' திரைப்படமும் வெளியானது.

விஜய் பட நாயகிக்கு எதிராக ஐநாவில் புகார் அளித்த பாகிஸ்தான்!

விஜய் நடித்த 'தமிழன்' படம் மூலம் திரையுலகில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா அதன்பின்னர் பாலிவுட், ஹாலிவுட் என உலகப்புகழ் பெற்றார். இந்த நிலையில் சமீபத்தில் காஷ்மீரில் 370வது சிறப்பு பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு பிரியங்கா சோப்ரா ஆதரவு தெரிவித்தார்.