அமலாபாலின் 'மின்மினி'க்கு என்ன ஆச்சு?

  • IndiaGlitz, [Thursday,June 15 2017]

நடிகர் விஷ்ணு மற்றும் நடிகை அமலாபால் முதன்முறையாக இணையும் படம் ஒன்றுக்கு 'மின்மினி' என்ற டைட்டில் வைக்கப்பட்டதாகவும், இந்த படத்தை முண்டாசுப்பட்டி' புகழ் ராம்குமார் இயக்கிவருகிறார்.

இந்நிலையில் இந்த படத்திற்கு திடீரென படக்குழுவினர் டைட்டிலை மாற்றியுள்ளனர். 'மின்மினி' என்று இருந்த இந்த படத்தின் டைட்டில் தற்போது 'ராட்சஸன்' என்று மாறியுள்ளது.

போலீஸ் வேடத்தில் விஷ்ணுவும், டீச்சர் வேடத்தில் அமலபாலும் நடிக்கும் இந்த படம் ஒரு சைக்கோ க்ரைம் த்ரில்லர் படம் முக்கிய வழக்கு ஒன்றை விஷ்ணு எதிர்கொள்ளும்போது சந்திக்கும் பிரச்சானைகள் குறித்தும் தான் இந்த கதை என்பது குறிப்பிடத்தக்கது.