தனுஷ் தயாரிப்பில் நடிக்கும் பிரபல தமிழ் நடிகர்

  • IndiaGlitz, [Wednesday,July 18 2018]

கோலிவுட் திரையுலகில் இளம் நடிகர்களில் ஒருவரான விஷ்ணுவிஷால் நடித்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தின் வெற்றிக்கு பின்னர் அவருடைய மார்க்கெட் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் விஷ்ணு நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை உறுதி செய்துள்ள விஷ்ணு, தான் தனுஷின் தீவிர ரசிகர் என்றும், அவருடைய தயாரிப்பில் நடிக்க ஆர்வத்துடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

விஷ்ணு தற்போது 'ராட்சஷன்', 'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்' மற்றும் 'ஜகஜலா கில்லாடி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ராட்சஷன் படத்தில் அமலாபாலும், சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்' படத்தில் ஓவியாவும் நாயகிகளாக நடித்து வருகின்றனர். இந்த இரு படங்களும் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.