2 சூப்பர்ஹிட் படம் கொடுத்த இயக்குனருடன் விஷ்ணு விஷால்.. ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இரண்டு சூப்பர் ஹிட் வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனருடன் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் இணைந்துள்ளதை அடுத்து இந்த படம் ஹாட்ரிக் வெற்றியை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
விஷ்ணு விஷால் நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ’முண்டாசுப்பட்டி’ என்ற திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. மேலும் மீண்டும் இருவரும் இணைந்த ’ராட்சசன்’ திரைப்படம் தமிழ் திரையுலகின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’முண்டாசுப்பட்டி’ ’ராட்சசன்’ ஆகிய படங்களை அடுத்து மீண்டும் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.
இந்த படம் விஷ்ணு விஷாலின் 21 வது படமாக இருக்கும் என்ற நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
We are extremely happy to announce our next film with the blockbuster combo of the supremely talented @TheVishnuVishal & the Maverick director @dir_ramkumar for their HATTRICK union #VV21 💥 🥁 @teamaimpr pic.twitter.com/qsTpB45qbd
— Sathya Jyothi Films (@SathyaJyothi) January 20, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com