சத்தம் போடாம கத்து.. விஷ்ணுவர்தனின் 'நேசிப்பாயா' டீசர் ரிலீஸ்..

  • IndiaGlitz, [Tuesday,September 24 2024]

நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவான ‘நேசிப்பாயா’ என்ற படத்தின் டீசர் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அஜித் நடித்த பில்லா, ஆரம்பம் உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் ‘நேசிப்பாயா’ என்ற படத்தை இயக்கி வந்தார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததாக செய்திகள் வெளியானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தில் நடிகர் முரளியின் சகோதரர் ஆகாஷ் முரளி ஹீரோவாக நடிக்கும் நிலையில், அதிதி சங்கர் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் சரத்குமார், பிரபு, குஷ்பூ, ராஜா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஒரு நிமிடத்திற்கு மேல் உள்ள இந்த டீசர், தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரொமான்ஸ் மற்றும் காமெடியாக ஆரம்பிக்கும் இந்த படத்தின் கதை, இரண்டாம் பாதியில் சீரியஸ் ஆக இருக்கும் என்பது டீசரில் இருந்து தெரிகிறது. இந்த படம் விஷ்ணுவர்த்தனின் இன்னொரு வெற்றி படமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த பிரபல நடிகரா? 'குக் வித் கோமாளி' சீசன் 5ல் கலக்கியவர்..!

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கலக்கிய பிரபல நகைச்சுவை நடிகர் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

அடடே என்ன ஒரு கூட்டணி? சூர்யா - ஆர்ஜே பாலாஜி படத்தின் இசையமைப்பாளர் இவரா?

சூர்யாவின் 45 வது திரைப்படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இந்த படத்தின் இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் குறித்த தகவல் வெளியாகி,

தனுஷின் 'இட்லி கடை': நித்யா மேனன், அசோக் செல்வன், அருண் விஜய் கேரக்டர்கள் என்ன?

தனுஷ் நடித்தும் இயக்கியும் வரும் 'இட்லி கடை' என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நித்யா மேனன், அருண் விஜய், மற்றும் அசோக் செல்வன்

மது அருந்த கூடாது உள்பட சில நிபந்தனைகள்.. தவெக தொண்டர்களுக்கு புஸ்ஸி ஆனந்த்..!

தளபதி விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி என்ற பகுதியில் நடைபெற இருக்கும் நிலையில்

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.