'மாஸ்டர்' தயாரிப்பாளரின் அடுத்த படம்: அஜித் பட இயக்குனருக்கு வாய்ப்பு!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது செய்து குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

’மாஸ்டர்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எங்களது XB பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படம் இது. பன்முக திறமை வாய்ந்த இயக்குனர் விஷ்ணுவர்தன் அவர்களுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

நடிகர் முரளியின் மகனும், அதர்வா முரளியின் இளைய சகோதரரான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இத்திரைப்படம் சம்பந்தப்பட்ட இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியிடப்படும். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எங்கள் நலன் விரும்பிகளுக்கும் எங்களது எக்ஸ்பி பிலிம் கிரேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’ இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த படத்தை இயக்கும் விஷ்ணுவர்தன், தல அஜித் நடித்த ‘பில்லா’, ‘ஆரம்பம்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.