விஷ்ணு-சுசீந்திரன் படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Wednesday,June 22 2016]

வெண்ணிலா கபடிக்குழு', அழகர்சாமியின் குதிரை', ஜீவா உள்பட பல திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன், உதயநிதி நடிக்கும் படம் ஒன்றை இயக்குவதாக இருந்தது. ஆனால் அந்த படம் சில மாதங்கள் தள்ளி போடப்பட்டதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது விஷ்ணுவிஷால் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக 'அச்சம் என்பது மடமையடா' நாயகி மஞ்சிமா மோகன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் முதல் தொடங்கவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல நடிகரும் இயக்குனருமாகிய பார்த்திபன் இணணந்துள்ளார். அனேகமாக அவர் இந்த படத்தின் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பார்த்திபன் ஏற்கனவே 'நானும் ரெளடிதான்' படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.இமான் இசையமைக்கவுள்ள இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

More News

இளையதளபதியின் அன்புக்கு இதைவிட ஒரு உதாரணம் தேவையா?

இளையதளபதி விஜய் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

42-ல் அடியெடுத்து வைக்கும் இளையதளபதியின் 42 குணாதிசயங்கள்

இளையதளபதி விஜய்க்கு இன்று 42வது பிறந்தநாள். இந்த நன்னாளில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் நாமும் நம்முடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து கொள்கிறோம். விஜய்யை பற்றி சொல்ல வேண்டுமென்றால் நூற்றுக்கணக்கில் விஷயங்கள் உள்ளன.

விஜய் பிறந்த நாளை எங்கு கொண்டாடினார்? முக்கிய தகவல்

இளையதளபதி விஜய் இன்று 'விஜய் 60' படக்குழுவினர்களுடன் தனது 42வது பிறந்த நாளை கொண்டாடினார் என சற்று முன்னர் பார்த்தோம்.,

தனுஷின் அடுத்த தேசிய விருதுக்கு இன்று அச்சாரம்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'பொல்லாதவன்', ஆடுகளம்' ஆகிய இரண்டு படங்களுமே நல்ல வெற்றி பெற்றதோடு ஆடுகளம்' படம் தனுஷூக்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது

விஜய் பிறந்த நாள் கொண்டாடியது எங்கே? புதிய தகவல்

இளையதளபதி விஜய் இன்று தனது 42வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் எங்கு பிறந்த நாளை கொண்டாடவுள்ளார் என்பது குறித்து நேற்று வரை பல்வேறு செய்திகள் வெளிவந்தன,