விஷ்ணு-சுசீந்திரன் படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Wednesday,June 22 2016]

வெண்ணிலா கபடிக்குழு', அழகர்சாமியின் குதிரை', ஜீவா உள்பட பல திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன், உதயநிதி நடிக்கும் படம் ஒன்றை இயக்குவதாக இருந்தது. ஆனால் அந்த படம் சில மாதங்கள் தள்ளி போடப்பட்டதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது விஷ்ணுவிஷால் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக 'அச்சம் என்பது மடமையடா' நாயகி மஞ்சிமா மோகன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் முதல் தொடங்கவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல நடிகரும் இயக்குனருமாகிய பார்த்திபன் இணணந்துள்ளார். அனேகமாக அவர் இந்த படத்தின் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பார்த்திபன் ஏற்கனவே 'நானும் ரெளடிதான்' படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.இமான் இசையமைக்கவுள்ள இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.