பூர்ணிமாவின் நட்பு குறித்து அதிரடி முடிவெடுத்த விஷ்ணு.. திடீர் திருப்பத்திற்கு என்ன காரணம்?

  • IndiaGlitz, [Thursday,November 30 2023]

கடந்த சில நாட்களாக பூர்ணிமா மற்றும் விஷ்ணு நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தனர் என்பதும் இருவரும் காதலிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. மாயா, விசித்ரா உட்பட ஒரு சிலர் இது குறித்து பேசியபோது பூர்ணிமா கூட வெட்கப்பட்டார். எனவே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முன்னர் இன்னொரு காதல் ஜோடி உருவாகும் என்று கூறப்பட்டது.

ஆனால் ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா ’பார்க்கிங்’ திரைப்படத்தின் புரமோஷன் பணிக்கு வந்து சென்ற பின்னர் விஷ்ணுவின் நடவடிக்கையில் திடீரென மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று திடீரென பூர்ணிமாவிடம், ‘உன்னுடைய நட்பு எனக்கு தேவை இல்லை, நீ இனிமேல் என்னை பற்றி எதுவும் பேசாதே, என்னிடமும் பேசாதே, இத்தோடு முடித்துக் கொள்வோம் நமது உறவை’ என்று கூறியது பூர்ணிமாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

‘ஏன் இப்படி சொல்கிறீர்கள், என்ன காரணம்’ என்று பூர்ணிமா கேட்டதற்கு கூட விஷ்ணு ’உன் கூட பேசினால் நெகட்டிவிட்டி அதிகமாக இருக்கிறது’ என்று கூற ’என்னால் நெகட்டிவிட்டியா? என்று பூர்ணிமா கேட்க, ‘எனக்கு நெகட்டிவிட்டி’ என்று கூறி சமாளிக்கிறார்.

விஷ்ணுவின் திடீர் முடிவு என்ன காரணம் என்று தெரியாமல் பூர்ணிமா அதிர்ச்சி அடையும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பூர்ணிமாவின் நட்பு குறித்து அதிரடி முடிவெடுத்த விஷ்ணுவுக்கு இனி பார்வையாளர்கள் மத்தியில் பாசிட்டிவ் ஆதரவு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.