மாயா கூட பரவாயில்லை, ஆனால் இவர் விஷக்கிருமி: விஷ்ணு சொன்னது யாரை?
Send us your feedback to audioarticles@vaarta.com
மாயா கூட பரவாயில்லை, பூர்ணிமா விஷக்கிருமி என விஷ்ணு கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை எட்டிவிட்ட நிலையில் இன்னும் இரண்டே வாரத்தில் இந்த நிகழ்ச்சி முடிவடைய உள்ளதால் இறுதிப் போட்டியை நோக்கி தீவிரமாக போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்
இந்த நிலையில் நேற்றைய டாஸ்க்கில் ரவீனா வெற்றி பெற்று 5 புள்ளிகள் பெற்றுள்ளார். இருப்பினும் நேற்றைய டாஸ்க்கில் மூன்று புள்ளிகள் பெற்ற விஷ்ணு தான் மொத்த புள்ளிகளில் முதலிடத்தில் உள்ளார் என்பதும் இன்னும் ஒரு சில புள்ளிகளை பெற்று விட்டால் அவர் டிக்கெட் டு பினாலேவில் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் விஷ்ணு நேற்று ரவீனாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது ’மாயாவை கூட ஒரு விதத்தில் ஒப்புக் கொள்ளலாம், ஆனால் பூர்ணிமா மிகவும் மோசமானவர், விஷக்கிருமி என்று கூறினார். ஏன் என ரவீனா கேட்டதற்கு ’பூர்ணிமா ஒன்று குழந்தை இல்லை, அவர் மற்றவர்களை குழந்தை போல் நினைத்துக் கொண்டு செயல்படுகிறார், ஆனால் என்னிடம் மட்டும் அவர் எந்த வம்பும் வைத்து கொள்ள மாட்டார். ஏனெனில் என்னிடம் அவருடைய சீக்ரெட்டுக்கள் உள்ளதால் தன்னிடம் வாலாட்ட மாட்டார் என்று கூறினார்.
மேலும் ’நாமினேஷனில் இல்லாமல் மற்றவர்களை பார்த்து ’ரெடி டு கோ’ என்று பூர்ணிமா கூறுவது நாகரீகமற்றது என்றும் நாமினேஷனில் இருந்து கொண்டு கூறினால் ஓகே’ என்றும் விஷ்ணு கூறினார். விஷ்ணு கூறுவதை பெரும்பாலான பார்வையாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். மாயாவை கூட ஒரு விதத்தில் சேர்த்துக் கொள்ளலாம், ஆனால் பூர்ணிமா மிகவும் மோசமானவர் என்று கமெண்ட்ஸ் கல் பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments