இவங்க மொறைக்கிறாங்க.. என்னை அடிப்பாங்கன்னு நினைக்கிறேன்: விஷ்ணு உறவினர் குறித்து பூர்ணிமா
- IndiaGlitz, [Wednesday,December 20 2023]
நான் விஷ்ணுவிடம் சரியாக பேசியதே இல்லை என்று பூர்ணிமா கூற அதற்கு விஷ்ணுவின் உறவினர் முறைக்க ’இவங்க என்ன அடிப்பார்கள் என்று நினைக்கிறேன், முறைக்கிறாங்க’ என்று பூர்ணிமா கூறியது காமெடியை ஏற்படுத்தி உள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் உறவினர்கள் வருகை தரும் வாரம் என்பதால் கலகலப்பாக உள்ளது. நேற்று அர்ச்சனா, பூர்ணிமா, விக்ரம் சரவணன் மற்றும் விஜய் வர்மா ஆகியோர்களின் குடும்பத்தினர் வந்த நிலையில் இன்று காலை முதல் புரோமோவில் நிக்சன் தந்தை வந்ததை பார்த்தோம்.
இந்த நிலையில் அடுத்தகட்டமாக விஷ்ணுவின் உறவினர் மற்றும் தாயார் வந்திருக்கும் நிலையில் விஷ்ணுவுக்கு அவரது உறவினர் சில ஆலோசனை கூறுகிறார். 'எல்லார்கிட்டயும் சரிசமமாக நடந்து கொள்ளுங்கள். அதிகமாக ஒரு பக்கம் போக வேண்டாம். அது வந்து அறவே வேண்டாம்,
குறிப்பாக யாருக்குமே ஸ்பெஷல் டைம் கொடுக்க வேண்டாம், பூர்ணிமா மாயா பிரண்ட்ஷிப் நன்றாக இருக்கிறது. அதற்குள் நீங்கள் போகாமல் இருப்பது நல்லது, நீங்கள் அவர்களை அவாய்ட் பண்றது நல்லது' என்று கூறினார்
அப்போது அங்கு வந்த பூர்ணிமா, ‘நான் விஷ்ணு கிட்ட எல்லாம் சரியா பேசினதே கிடையாது’ என்று கூற அதற்கு விஷ்ணு உறவினர் ஒரு மாதிரியாக பார்க்கிறார். இதனை அடுத்து ’இவங்க என்ன அடிப்பாங்க நினைக்கிறேன், முறைக்கிறாங்க’ என்று சொல்வதுடன் இன்றைய இரண்டாவது புரமோ முடிவுக்கு வருகிறது,.