தேர்தல் நேரத்தில் கலக்க வரும் விஷ்ணு மஞ்சுவின் 'குறள் 388'
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு நடிக்கும் 'குறள் 388' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் அவருடைய பிறந்த நாளில் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது. இந்த நிலையில் அரசியல் த்ரில்லர் படமான இந்த படம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் உள்பட பல தேசிய, மாநில கட்சிகளின் தலைவர்கள் படம் இடம் பெற்றிருந்ததால் அனைவரின் கவனத்தையும் பெற்றது. அறிமுக இயக்குனர் GS கார்த்திக் இயக்கியுள்ள இந்த படத்தில் விஷ்ணுமஞ்சுவுக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் 'இவன் வேற மாதிரி', 'வேலையில்லா பட்டதாரி' போன்ற படங்களில் நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் 'குறள் 388' , தெலுங்கில் வோட்டர் ஆகிய தலைப்புகளில் வெளியாகும் இந்த படம், திருவள்ளுவர் எழுதிய குறளில் 388 வது குறளான, 'முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்' என்ற குறளின் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
தேர்தலின் போது போலியான வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலுக்குப் பின் அதை மறந்து விடும் போலியான அரசியல்வாதிகளின் முகத்திரைகளை தோலுரிக்கும் கதையே குறள் 388 படத்தின் கதையாகும். பிரபாஸ், மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன் போலவே விஷ்ணுமஞ்சுவிற்கு இந்த படம் தமிழில் நல்ல ஒரு அறிமுகபடமாக அமையும் என்று கருதப்படுகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments