'குறள்' தலைப்பு படத்தில் தமிழுக்கு அறிமுகமாகும் பிரபல தெலுங்கு நடிகரின் மகன்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தெலுங்கு நடிகரும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நிலையில் முதல்முறையாக தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு திருக்குறள் சம்பந்தப்பட்ட டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆம் 'குறள் 388' என்பதுதான் இந்த படத்தின் டைட்டில்
ஏழே வார்த்தைகளில் அடங்கிய திருக்குறளில் சொல்லப்படாத கருத்தே இல்லை என்று உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 388வது குறளின் பொருளை கருவாக வைத்து இந்த படம் உருவாக்கப்படவுள்ளதால் இந்த படத்திற்கு 'குறள் 388' என்ற டைட்டில் தமிழுக்கும், 'வோட்டர்' என்ற டைட்டில் தெலுங்கிற்கும் வைக்கப்பட்டுள்ளது.
விஷ்ணுமஞ்சு ஜோடியாக சுரபி நடிக்கவுள்ள இந்த படத்தில் சம்பத் ராஜ்,போசானி கிருஷ்ண முரளி, நாசர், பிரகதி, முனீஸ்காந்த், தலைவாசல் விஜய், பிரமானந்தம், சுப்ரீத் ஸ்ரவன், L.B.ஸ்ரீராம் ஆகியோர் நடிக்கிறார்கள். ஜி.எஸ்.கார்த்தி இயக்கவுள்ள இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கின்றார். இந்த படத்தை ராமா ரீல்ஸ் பட நிறுவனம் சார்பாக ஜான் சுதீர்குமார் புதோடோ தயாரிக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments