'குறள்' தலைப்பு படத்தில் தமிழுக்கு அறிமுகமாகும் பிரபல தெலுங்கு நடிகரின் மகன்

  • IndiaGlitz, [Sunday,October 01 2017]

பிரபல தெலுங்கு நடிகரும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நிலையில் முதல்முறையாக தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு திருக்குறள் சம்பந்தப்பட்ட டைட்டில்  வைக்கப்பட்டுள்ளது. ஆம் 'குறள் 388' என்பதுதான் இந்த படத்தின் டைட்டில்

ஏழே வார்த்தைகளில் அடங்கிய திருக்குறளில் சொல்லப்படாத கருத்தே இல்லை என்று உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 388வது குறளின் பொருளை கருவாக வைத்து இந்த படம் உருவாக்கப்படவுள்ளதால் இந்த படத்திற்கு 'குறள் 388' என்ற டைட்டில் தமிழுக்கும், 'வோட்டர்' என்ற டைட்டில் தெலுங்கிற்கும் வைக்கப்பட்டுள்ளது.

விஷ்ணுமஞ்சு ஜோடியாக சுரபி நடிக்கவுள்ள இந்த படத்தில் சம்பத் ராஜ்,போசானி கிருஷ்ண முரளி, நாசர், பிரகதி, முனீஸ்காந்த், தலைவாசல் விஜய், பிரமானந்தம், சுப்ரீத் ஸ்ரவன், L.B.ஸ்ரீராம் ஆகியோர் நடிக்கிறார்கள். ஜி.எஸ்.கார்த்தி இயக்கவுள்ள இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கின்றார். இந்த படத்தை ராமா ரீல்ஸ் பட நிறுவனம் சார்பாக ஜான் சுதீர்குமார் புதோடோ தயாரிக்கிறார்.

More News

சிம்புவின் அடுத்த ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிம்பு தற்போது ஆங்கிலப்படம் மற்றும் மணிரத்னம் படம் ஆகியவற்றில் நடிக்க தயாராகி வரும் நிலையில் அவர் இசையமைத்த 'சக்க போடு போடு ராஜா' படத்தின் சிங்கிள் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் துணைமுதல்வருடன் கமல்-ரஜினி

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் மணிமண்டபத்தை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சற்றுமுன் திறந்து வைத்து சிவாஜி கணேசன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கமல், ரஜினியை கைகுலுக்கி வரவேற்ற ஓபிஎஸ்: பொன்னாடை போர்த்திய அமைச்சர்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய மணிமண்டபம் சற்றுமுன் திறக்கப்பட்டது.

கமல் என்னிடம் ரகசியத்தை கூற மறுக்கின்றார். சிவாஜி விழாவில் ரஜினி

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் தன்னிடம் ரகசியத்தை கூற மறுப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்

இந்தியன்' படத்தின் 2ஆம் பாகத்தின் டைட்டில்: கமல் கூறிய ஆலோசனை

கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் மீண்டும் இணைந்து 'இந்தியன் 2' திரைப்படத்தில் பணிபுரிவது உறுதியாகிவிட்டது என்பதையும் இந்த படத்தை தில்ராஜூ தயாரிக்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்