'போட்றா வெடிய.. பிக்பாஸ் வீட்டில் சொன்னதை வெளியே வந்த பின்னர் செய்த விஷ்ணு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக விஷ்ணு இருந்தபோது மாயாவை தவிர வேறு யார் டைட்டில் பட்டம் என்றாலும் வெளியே போனதும் பத்தாயிரம் வாலா வெடி வெடிப்பேன் என்று கூறியிருந்த நிலையில் அதை தற்போது நிறைவேற்றி உள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒரு சில நாட்களிலேயே இரண்டு குரூப்பாக பிரிந்து போட்டியாளர்கள் விளையாட தொடங்கினர். குறிப்பாக மாயா குரூப்பில் அதிக போட்டியாளர்கள் இருந்தனர் என்பதும் விஷ்ணு குரூப்பில் ஒரு சில போட்டியாளர்கள் இருந்தனர் என்பதும் இரண்டு குரூப்புகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் வந்தது என்பது இந்த நிகழ்ச்சியை தொடர்ச்சியாக பார்த்திருப்பவர்களுக்கு தெரிந்திருக்கும்.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது மாயாவை தவறாக வேறு யார் வேண்டுமானாலும் டைட்டில் வின்னர் பட்டம் பெற்றால் நான் பத்தாயிரம் வாலா வெடி வெடிப்பேன் என்று விஷ்ணு கூறியிருந்தார். அதேபோலவே தனக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவரான அர்ச்சனா டைட்டில் பட்டம் வென்றதையும் மாயா தோல்வி அடைந்ததை கொண்டாடும் வகையிலும் விஷ்ணு பத்தாயிரம் வாலா வெடி வெடித்துள்ளார். இது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் விஷ்ணு சொன்னதை செய்து விட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அர்ச்சனா டைட்டில் வின்னர் பட்டம் பெற்ற மகிழ்ச்சியை விட மாயாவின் தோல்விக்காக தான் அவர் இந்த வெடியை வெடிக்கிறார் என்று கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments