பேட்மிண்டன் வீராங்கனையை காதலிப்பது உண்மையா? விஷ்ணு விஷால் விளக்கம்
- IndiaGlitz, [Thursday,June 06 2019]
நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் எடுத்த இரண்டு செல்பி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படம் குறித்து அவர் எந்தவித கருத்தும் தெரிவிக்காததால் அவரது ரசிகர்களும் நெட்டிசன்களும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தங்களது யூகங்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் விளக்கமளித்த விஷ்ணுவிஷால், 'கடந்த சில ஆண்டுகளாக இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து வருகிறோம். எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர்கள் சிலர் இருப்பதால் அவர்களுடன் நிறைய நேரத்தை செலவிடுகிறோம், இப்போதைக்கு நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம். எங்களது ரிலேசன்ஷிப் அடுத்தகட்டத்திற்கு செல்லுமா? என்பதை இப்பொதைக்கு எதுவும் சொல்ல முடியாது. ஏனெனில் இருவருமே அவரவர் துறைகளில் பிசியாக இருக்கின்றோம்' என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் விஷ்ணு விஷால் தற்போது இயக்குனர் எழில் இயக்கி வரும் 'ஜகஜால கில்லாடி' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் விக்ராந்துடன் இணைந்தும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது