நானெல்லாம் டைட்டில் வாங்கிட்டா தீக்குளிச்சிருவாங்க போல.. நள்ளிரவில் பேசிய போட்டியாளர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவர் நானெல்லாம் டைட்டில் வாங்கிட்டா இவனுங்க செட் முன்னாடியே தீக்குளித்து விடுவாங்க போல என்று காமெடியாக பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இதுகுறித்து நள்ளிரவில் சக போட்டியாளர்களிடம் பேசிய விஷ்ணு, ’நான் ஜெயிச்சிட்டேன் என்று சொன்னதும் சிலர் முகத்தில் பார்க்கணுமே, எனக்காக நானே தான் கைதட்டிக்கிறேன், ஒருத்தன் கூட கைதட்டல’ என்று கூறியவர் ’பாயிண்ட்ஸ் வைக்கும் போது கூட ஒரு மாதிரி பேசுகிறார்கள் என்றார்.
டேய் என்னடா இது, 3 பாயிண்ட் தாண்டா வாங்கி இருக்கேன், இன்னும் 15 பாயிண்ட் இருக்கு, இப்பவே இப்படின்னா, நானெல்லாம் டைட்டில் வின் பண்ணிட்டா செட்டு முன்னாடியே தீக்குளிச்சிடுவாங்க போல இருக்கு. இவனுங்க செஞ்சதெல்லாம் வெளியில் போய் பார்த்தாவாது புரியுமா என்று தெரியவில்லை, அப்படி பார்க்க விட்டால் நானே ரெக்கார்ட் பண்ணி அவங்களுக்கு அனுப்புவேன்’ என்று விஷ்ணு கூறினார்
நான் மட்டும் அவார்ட் வாங்கி விட்டால் என்னென்னமோ நடக்கும்போல தெரியுது, ஒருவேளை பந்த் நடத்தினாலும் நடத்துவாங்க.. நம்ம எதுக்கு வந்திருக்கிறோம், கேம் விளையாடத்தான வந்திருக்கோம், ஆனால் கேம் விளையாடினா திட்டுறாங்க. பிக் பாஸ் சொன்னபடி கேம் ஆடினால் கோபப்படுறாங்க, என்ன செய்யறதுன்னு தெரியல
நான் என்ன இவங்க சொத்துக்களை எல்லாம் எழுதி வாங்கிட்டேனா? இவங்களுக்கு ஜால்ரா போடாதது ஒரு தப்பா? கடைசி வரை இவங்களுக்கு நான் சப்போர்ட் பண்ண மாட்டேன், என்னிடம் அன்பு காட்டினால் நான் உயிரை கூட குடுப்பேன், ஆனால் என்னிடம் மூஞ்சி காட்டினால் நான் வேற மாதிரி இருப்பேன்’ என்று விஷ்ணு கூறினார். இவருடைய பேச்சை பார்க்கும்போது மாயா-பூர்ணிமா குரூப்பை தான் சொல்கிறார் என்பது புரிகிறது.
நள்ளிரவில் மணி உள்பட ஒரு சிலரிடம் விஷ்ணு பேசிய இந்த காமெடி பேச்சின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Rocking midnight comedy by #Vishnu 🤣🤣🤣
— Athiban (@athiban43481241) December 26, 2023
On par with Vadivelu! 😀😀#BiggbossTamil7 #BiggBoss7Tamil #BiggBossTamilSeason7 pic.twitter.com/A22iiQT4cs
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments