என் கூட ரிலேஷன்ஷிப்பில் இருப்பியா? பெண் போட்டியாளரிடம் கேட்டாரா விஷ்ணு? வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
என்னுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பியா? என்று விஷ்ணு கேட்டதாக பெண் போட்டியாளர் ஒருவர் சக போட்டியாளர்களிடம் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் ஒரு சில ரொமான்ஸ் காட்சிகள் இருந்தாலும் இதுவரை எந்த ஜோடியும் காதலர்கள் என்று உறுதி செய்யப்படவில்லை. கடந்த சில நாட்களாக விஷ்ணுவிடம் பூர்ணிமா நெருக்கமாக பழகி வந்தாலும் திடீரென இருவருக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வந்துவிட்டது.
இந்த நிலையில் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த அனன்யாவிடம் என்னுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறாயா என்று விஷ்ணு கேட்டதாக மாயா, பூர்ணிமா குரூப்பில் உள்ளவர்கள் தான் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நான் முடியாது என்று சொன்னவுடன் பேச்சை மாற்றி ’எனக்கு ஆதரவாக இருப்பாயா என்றுதான் கேட்டேன் என்று கூறியதாகவும் ஏன் ஒரு நண்பராக இருந்து ஆதரவாக இருக்க கூடாதா? ரிலேஷன்ஷிப்பில் இருந்து தான் ஆதரவாக இருக்க வேண்டுமா என்று தான் கூறியதாகவும் அனன்யா தெரிவித்தார்.
உண்மையில் விஷ்ணு, அனன்யாவிடம் அவ்வாறு கேட்டாரா? அவ்வாறு கேட்டிருந்தால் 24 மணி நேர நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் கண்களில் பட்டு, அது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்குமே? விஷ்ணு மீது அபாண்டமாக அனன்யா பொய் சொல்லுகிறாரா? இவ்வளவு பெரிய விஷயம் நடந்தும் இதனை கமல் முன் அனன்யா ஏன் சொல்லவில்லை? என்ற பல கேள்விகள் பார்வையாளர்களுக்கு எழுந்துள்ளது.
#AnanyaRao about #Vishnu 🧐
— Sekar 𝕏 (@itzSekar) December 8, 2023
Ananya says Vishnu enkitta you want to be in a relationship with me nu ketaru
Anyone Heard this ?#BiggBossTamil #BiggBossTamil7#BiggBoss7Tamil #BiggBoss7#BiggBossTamilSeason7 #BiggBosspic.twitter.com/Gz7Mfijol4
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments