நீங்க கேப்டனாக இல்லை.. உங்ககிட்ட ஆளுமை இல்லை.. வச்சு செய்யும் விஷ்ணு..!

  • IndiaGlitz, [Monday,October 09 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஒரே வாரத்தில் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் போட்டியாளர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக இன்றைய முதல் புரமோவில் விஷ்ணு சக போட்டியாளர் மணி சந்திராவுடன் வாக்குவாதம் செய்கிறார். அவர் விஷ்ணுவை ’ஏய்’ என மணிச்சந்திரா கூற என்னை ’ஏய்’ என்று கூப்பிடுகிறாய் என்று விஷ்ணு கூற, நான் ’ஏய்’ என்று கூறவில்லை டேய் என்று தான் கூப்பிட்டேன் என்றுகிறார். அது எப்படி நீ என்னை டேய் என்று கூப்பிடலாம், என்னுடைய பெயரை சொல்லி கூப்பிடு என்று விஷ்ணு வாக்குவாதம் செய்கிறார்.

இதனை அடுத்து போட்டியாளர்கள் அனைவரும் உட்கார்ந்து ஆலோசனை செய்து கொண்டிருக்கும் போது, இந்த வார கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட சரவணா விக்ரமிடம், ‘இங்கே வந்து நீங்கள் கேப்டனா அல்லது 11 பேரும் கேப்டனா? அப்போ உங்ககிட்ட ஆளுமை இல்லையா? என்று கூறுகிறார்.

அப்போது இடைமறிக்கும் பிரதீப், ‘ அதை நீங்கள் சொல்லாதீர்கள் என சொல்ல, அப்படி எல்லாம் பண்ண முடியாது இங்க டீமாக பேசும்போது டீமாகத்தான் பேச வேண்டும் என்று கூறுகிறார்.

அப்போது ’அதை கேப்டன் சொல்லட்டும், நீ சொல்ல வேண்டாம் என்று பிரதீப் கூற, ‘நான் சொல்லுவேன், உனக்கு கேமே ஆடத் தெரியவில்லை, நீ எல்லாம் பேசாதே என்று மடக்குகிறார். இதனால் இன்று ஒரு பஞ்சாயத்து இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.