முடிவுக்கு வந்தது விஷ்ணுவின் மற்றொரு ஸ்போர்ட்ஸ் திரைப்படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஷ்ணுவிஷால் மற்றும் நடிகர் விக்ராந்த் இணைந்து நடித்து வந்த ஸ்போர்ட்ஸ் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திடீரென விஷ்ணுவின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு தாமதமானது. ஆனால் சமீபத்தில் அவர் குணமாகி மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இதனை நடிகர் விஷ்ணுவிஷால் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததையடுத்து விரைவில் இந்த படத்தின் போஸ்ட் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கவுள்ளன. விஷ்ணு, விக்ராந்த் இணைந்து நடித்திருக்கும் இந்த ஸ்போர்ட்ஸ் படத்தை இயக்குனர் சஞ்சீவ் இயக்கியுள்ளார். இவர் விஷ்ணுவின் சகோதரர் என்பது மட்டுமின்றி விக்ராந்த் நடித்த 'தாக்க தாக்க' படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இயக்குனர் சஞ்சீவ், நடிகர் விஜய்சேதுபதியின் நெருங்கிய நண்பர் என்பதால் இந்த படத்திற்கு விஜய்சேதுபதி திரைக்கதை வசனம் எழுதி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
A trip of work n some fun comes to an end with great memories :) happy to have bonded with the producer and director of the untitled film with @vikranth_offl :) lookin forward for a good sports film once again:) #phuketmemories pic.twitter.com/kYXDGiP6gO
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) April 17, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments