விஷ்ணுவிஷாலுடன் இணையும் பிரபல ஹீரோ!

  • IndiaGlitz, [Saturday,March 16 2019]

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'ராட்சசன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவர் தற்போது 'ஜகஜல கில்லாடி' என்ற படத்தில் நடித்து வருகிறார். 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' 'படத்திற்கு பின் விஷ்ணு விஷால் நடிக்கும் இந்த படத்தை இயக்குனர் எழில் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் விஷ்ணுவிஷால் படப்ப்பிடிப்பின்போது எதிர்பாராதவிதமாக காயமடைந்தார். இதனால் கடந்த சில வாரங்களாக எந்தவித படப்பிடிப்புக்கும் செல்லாமல் ஓய்வு எடுத்தார். தற்போது அவர் முழுமையாக குணமடைந்துவிட்டதால் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில் பிரபல நடிகரும், தளபதி விஜய்யின் சகோதரரும் விஷ்ணுவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான விக்ராந்துடன் இணைந்து விஷ்ணு விஷால் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த படம் குறித்த முழுமையான விபரங்கள் விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் விஷ்ணுவிஷால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

More News

காமஹாசனும் கதாகாலட்சேபமும்: கமல்ஹாசனை விமர்சித்த அதிமுக நாளிதழ் 

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து நேற்று கமல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வீடியோவுக்கு சமூக வலைத்தள பயனாளிகளின் ஆதரவு குவிந்தது. 

ஆனந்தக்கண்ணீருடன் மீண்டும் வந்துவிட்டேன்: ஹர்பஜன்சிங்

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் நடைபெற்று வரும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு வரும் 23ஆம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது.

'அசுரன்' ஆல்பத்தின் சூப்பர் ஸ்பெஷல் தகவல்: ஜிவி பிரகாஷின் அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்

பொன்னியின் செல்வன்: வந்தியத்தேவன் கேரக்டரில் பிரபல நடிகர்

மணிரத்னம் அவர்களின் கனவுப்படமான 'பொன்னியின் செல்வன்' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாகவும்

மக்களவை தேர்தல் எதிரொலி: பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை அதிகரிப்பு

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவை வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளதால் அதற்கு முன்னரே அதாவது ஏப்ரல் 14ஆம் தேதிக்கு முன்னரே