பிரதீப் பாத்ரூமில் தாழ் போடாமல் யூஸ் செய்த விவகாரம்... உண்மையை உளறிய விஷ்ணு-பூர்ணிமா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப், பாத்ரூமை தாழ் போடாமல் பயன்படுத்திய விவகாரம் கமல்ஹாசன் முன்னிலையில் குற்றச்சாட்டாக வைக்கப்பட்ட நிலையில் உண்மை என்ன என்பதை விஷ்ணு மற்றும் பூர்ணிமா பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் விஷ்ணு கூறும் போது ’பாத்ரூமில் நான் தாழ் போட்டேன், ஆனால் அதில் பிரச்சனை இருக்கிறது, அதனால் அது தானாக திறந்து விட்டது, அப்போது பூர்ணிமா என்னை பார்த்து விட்டார்கள்’ என்று புலம்பியபடி கூறுகிறார். அதற்கு பூர்ணிமா பாத்ரூமில் கேப் இருந்ததுங்க, நீங்க தாழ் போடவே இல்லை’ என்று கூற ’இல்லை இல்லை நான் தாழ் போட்டேன், அந்த கதவில் தான் பிராப்ளம் இருக்கிறது என்று கூறினார்.
ஆனால் இதே பிரச்சனை பிரதீப்புக்கு வந்த போது மட்டும் அவர் வேண்டுமென்றே தாழ் போடாமல் பாத்ரூமை பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை சக போட்டியாளர்கள் முன்வைத்தனர். ஆனால் அந்த பாத்ரூமில் ஏற்கனவே தாழ் பிரச்சனை இருந்திருக்கிறது என்பதை பூர்ணிமா மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும் தங்களை அறியாமல் உளறி இருக்கின்றனர். அப்படி என்றால் பிரதீப் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று தான் தற்போது கருத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
#pradeep bathroom issue Proof here ::
— Eleganzy Dezignz (@EleganzyDezignz) January 7, 2024
1. Bathroom door lock problem aa irukku
2. Push pannale open
3. Thaana thurakkuthu Lock problems
Ithe kaaranathal #poornima open pannitange Niraye perukku ithu nadanithirukku#BiggBossTamil#BiggBossTamil7pic.twitter.com/2pBEoJGUXg
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments