மாயா - பூர்ணிமா டம்மி பிளேயர்ஸ்.. சொன்னது யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாயா மற்றும் பூர்ணிமா ஆகிய இருவரும் தங்களை வலிமையான போட்டியாளர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் இருவரும் டம்மி போட்டியாளர்கள் என மணி சந்திரா கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஷ்ணு மற்றும் மணி சந்திரா ஆகிய இருவரும் பேசும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி உள்ளது. அந்த வீடியோவில் ’மாயா மற்றும் பூர்ணிமா குறித்து நான் பலமுறை யோசித்து இருக்கிறேன். உண்மையாகவே இவர்கள் வலிமையான போட்டியாளர்களா? அல்லது மக்கு போட்டியாளர்களா என்று யோசிப்பேன். அப்போதுதான் அவர்கள் மக்கு போட்டியாளர்கள் என்று தெரிந்தது’ என்று மணி சந்திரா கூறினார்.
அதற்கு விஷ்ணு ’உண்மையிலேயே இருவரும் மக்கு போட்டியாளர்கள் தான். ஒரு நல்ல போட்டியாளர்கள் என்றால் அவர்கள் என்ன திட்டம் போடுகிறார்கள் என்று வெளியே யாருக்கும் தெரியக்கூடாது. ஆனால் மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் போடும் திட்டங்கள் எல்லோருக்கும் தெரிந்து விடும்.
நானெல்லாம் இரண்டு நாட்களுக்கு முன்பே ஸ்கெட்ச் போட்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து வைத்து விடுவேன். குறிப்பாக பூர்ணிமா தனக்கு என்று கட்டமைப்பை வைத்திருந்தார். தன்னுடைய கேரக்டர், தன்னுடைய செய்கைகள் என அவர் வைத்திருந்த நிலையில் அதை ஒவ்வொன்றாக நான்தான் உடைத்தேன் என்று கூறினார்.
விஷ்ணு, மணி சந்திரா ஆகிய இருவரும் மாயா மற்றும் பூர்ணிமா குறித்து பேசி இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் அதை ஆமோதித்து கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments