கயிற்றால் கட்டப்பட்ட விஷ்ணு, அர்ச்சனா, பூர்ணிமா.. கொளுத்திவிட்ட ரவீனா.. என்ன நடந்தது?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியை 60 நாட்களைத் தாண்டி சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடின் இரண்டாவது புரமோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. அதில் விஷ்ணு, அர்ச்சனா மற்றும் பூர்ணிமா ஆகிய மூவரும் கயிற்றால் கட்டப்பட்டுள்ளனர். மூவருக்கும் தற்போது ஒருவருக்கொருவர் நிலைமை சரியில்லாத நிலையில் மூவரையும் கயிற்றால் கட்டப்பட்டு இருப்பது ஏன் என்று தெரியாமல் பார்வையாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கேம் பிளான் என்ன? என்று அர்ச்சனாவிடம் விஷ்ணு கேட்கும்போது அவரும் அமைதியாக பதிலளித்தார். ஆனால் அங்கு வந்த ரவீனா ’ப்ரெண்ட்ஸ் ஆவாதீங்கணா, சண்டை போடுங்கணானு’ என விஷ்ணுவிடம் கொளுத்தி விட்டார்.
அதைக்கேட்டு ஆவேசமான அர்ச்சனா ’நான் எமோஷனலா பிரேக் ஆவது உங்களுக்கெல்லாம் ஜாலியா இருக்கா? என்று கோபப்பட ’சும்மா விளையாட்டுக்கு பேசினேன், அதற்கு எதற்கு என்னை திட்டுகிறீர்கள்? என்று ஒன்றும் தெரியாதது போல் ரவீனா கேட்டார்.
இதனை அடுத்து பயங்கர டென்ஷன் ஆன அர்ச்சனா ’லப லப லபனு கத்துறீங்க. சின்னக் குழந்தையா நீங்க. விடுங்கடா. இந்த ஆளுடன் இருக்கணும்னு எனக்கு அவசியம் இல்ல. வச்சுட்டு போகச் சொல்லுங்க, ச்சீனு என்று சொல்லி கயிற்றை அவிழ்த்து விட்டு இடத்தை காலி செய்தார்.
மொத்தத்தில் இன்றைய புரோமோ வீடியோக்களை பார்க்கும் போது விஷ்ணு - அர்ச்சனா சண்டை இப்போதைக்கு முடிவுக்கு வராது போல் தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com